மருத்துவப் படிப்புக்கு கூடுதலாக 10,000 இடங்கள்: ஒன்றிய அரசு திட்டம்

டெல்லி: அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்களை கூடுதலாக 5,023 அதிகரிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. எம்.டி., எம்.எஸ்., உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களையும் 5,000 அதிகரிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. ஒன்றிய அரசின் ஆதரவிலான திட்டத்தின் 3ம் கட்டமாக மருத்துவப் படிப்பு இடங்களை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்பு இடத்துக்கு ரூ.1.5 கோடி வீதம் இரு திட்டங்களுக்கும் ரூ. 15,034.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2025-26 கல்வியாண்டில் இருந்து 2028-29 கல்வியாண்டுக்குள் திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்பின் கீழ் புதிய சிறப்பு மருத்துவ படிப்புகளையும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புக்கான இடங்களை அதிகரிப்பதற்கு ஏதுவாக கல்லூரிகள் மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: