தேர்தல்கள் திருடப்படும் வரை வேலையின்மை, ஊழல் தொடர்ந்து அதிகரிக்கும்: ராகுல் காந்தி விமர்சனம்

 

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில்,‘‘ ஒரு அரசு மக்களின் நம்பிக்கையை வென்று ஆட்சிக்கு வரும்போது அதன் முதல் கடமையானது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாய்ப்புக்களை வழங்குவதாகும். ஆனால் பாஜ தேர்தல்களில் நேர்மையாக வெற்றி பெறுவதில்லை. அவர்கள் வாக்குகளை திருடி அரசியலமைப்பு நிறுவனங்களை கட்டுப்படுத்துவதன் மூலமாக ஆட்சியில் நீடிக்கிறார்கள். இதன் காரணமாக வேலையின்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது. ஆட்சேர்ப்பு செயல்முறைகள் சரிந்துவிட்டன.

இளைஞர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. ஒவ்வொரு தேர்வு வினாத்தாள் கசிவும், ஒவ்வொரு ஆட்சேர்ப்பும் ஊழல் கதைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. உண்மையான போராட்டம் வேலைகளுக்கு மட்டுமல்ல, வாக்கு திருட்டுக்கும் எதிரானது என்பதை இந்தியாவின் இளைஞர்கள் புரிந்துகொள்கிறார்கள். ஏனென்றால் தேர்தல்கள் திருடப்படும் வரை வேலையின்மை மற்றும் ஊழல் தொடர்ந்து உயரும். இப்போது இறுதி தேசபக்தி என்பது வேலையின்மை மற்றும் வாக்கு திருட்டில் இருந்து இந்தியாவை விடுவிப்பதில் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: