மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான பொதுக்கூட்டம்

 

திருப்பூர், செப். 22: திருப்பூர் மத்திய மாவட்ட திமுக சார்பில், தெற்கு மாநகரம் கொங்கணகிரி பகுதி வளையங்காடு, வ.உ.சி. நகர் மெயின்ரோடு பகுதியில், ஓரணியில் தமிழ்நாடு தீர்மான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மத்திய மாவட்ட செயலாளர், செல்வராஜ் எம்எல்ஏ தலைமை தாங்கி பேசினார். தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன் முன்னிலை வகித்தார். இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மேயர் தினேஷ்குமார் மற்றும் பகுதி செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, தெற்கு மாணவரணி அமைப்பாளர் திலக்ராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கலைச்செல்வி மற்றும் நிர்வாகிகள் நந்தினி, குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: