கைக்கு எட்டும் உயரத்தில் மின்வயர் உயிர்பலி அச்சத்தில் மக்கள்

தொண்டி, டிச.22:  முகிழ்த்தகம் வெள்ளாளகோட்டை பகுதியில் கைக்கு எட்டும் தூரத்தில் மின் கம்பி தாழ்வாக செல்கிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொண்டி அருகே உள்ள முகிழ்த்தகம் கிராமத்தில் வெள்ளாளகோட்டை பகுதியில் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் மின் கம்பி மிகவும் தாழ்வாக கைக்கு எட்டும் உயரத்தில் உள்ளது. மழை காலங்களில் வழக்கத்தை விட மிகவும் தாழ்வாக தொங்குகிறது. கால்நடைகளை கொண்டு செல்வோர் ஒரு வித அச்சத்துடன் செல்கின்றனர். குடியிருப்பு பகுதி என்பதால் எந்நேரமும் மக்கள் பயத்துடனே இப்பகுதியை கடந்து செல்கின்றனர். இது குறித்து மின் வாரியத்தில் பல முறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து பிரபு கூறியது, கைக்கு எட்டும் தூரத்தில் மின் கம்பி செல்கிறது. சில தினங்களுககு முன்பு மழை நேரத்தில் அதிஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டது. உயிர் பலி நடக்கும் முன்பு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் வயல்காட்டு பகுதியிலும், தலையில் தட்டும் வகையில் மின் கம்பி தொங்குகிறது. கடந்த வருடம் இதன் அருகில் மின்சாரம் தாக்கி மாடு ஒன்று இறந்தது. எனவே அசம்பாவிதம் எதுவும் நிகழும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: