மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் திறப்பு விழா

ஓசூர், செப்.19: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த உத்தனப்பள்ளியில் மின்வாரியத்தின் உதவி பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலக வளாகத்திலேயே, உதவி செயற்பொறியாளர் அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ கலந்து கொண்டு, அலுவலக பலகையை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்நிகழ்ச்சியில், உதவி மின் பொறியாளர் மகேந்திரன், உதவி பொறியாளர் திமோனிகா, அதிமுக ஒன்றிய செயலாளர்கள் மாதேஷ், பாபு வெங்கடாசலம், முருகன், மாவட்ட பொருளாளர் மல்லையன், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: