கட்சிரோலி: மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தின் எடப்பள்ளி தாலுகாவின் மோடஸ்கே கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் காவல்துறையினர் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் இணைந்து குறிப்பிட்ட பகுதியில் நக்சல் கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த நக்சல்கள் காவல்துறையினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பெண் நக்சல்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.
மகாராஷ்டிராவில் 2 பெண் நக்சல்கள் சுட்டு கொலை
- நக்சலைட்டுகள்
- மகாராஷ்டிரா
- கட்சிரோலி
- நக்சலைட்டுகள்
- மொடஸ்கே
- எடப்பள்ளி தாலுகா
- கட்சிரோலி மாவட்டம்
- மத்திய ரிசர்வ் போலீஸ் படை
- நக்சல்
