பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் ஜப்பானிய மூளை காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் முகாம்

கடையம், செப். 18: தென்காசி மாவட்டத்தில் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஜப்பானிய மூளை காய்ச்சல் தடுப்பூசி போடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தென்காசி மாவட்டத்தில் 1 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி, பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் தற்போது போடப்பட்டு வருகிறது. வருங்காலங்களில் வழக்கமான தடுப்பூசி அட்டவணையில் சேர்த்து வழங்கப்படவும் உள்ளது. பொதுமக்கள் தற்போது தங்களது குழந்தைகள் படிக்கும் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் இந்த தடுப்பூசியை தங்களது குழந்தைகளுக்கு செலுத்தி ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயில் இருந்து பாதுகாக்க கடையம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் பழனிக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: