கடத்தூர் ஒன்றியத்தில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி

கடத்தூர், செப். 18 : கடத்தூர் ஒன்றியம், அஸ்தகிரியூர் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3.94 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நேற்று நடந்தது. இதில் பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் முருகன், ஒன்றிய துணை செயலாளர் ரவி, சந்தோஷ், மாவட்ட பிரதிநிதி சாரதி, ராஜா, பாலு, பிரதாப், பெரியண்ணன், தர்மா, கிருபாநிதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: