சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை தொழிலாளிக்கு 22 ஆண்டு சிறை

தூத்துக்குடி,செப்.17: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு 22 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024ம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வழக்கில் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் மாடசாமி (எ) மகேஷ் (29) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கை நீதிபதி பிரித்தா விசாரித்தார். மேலும் அவர் குற்றச்சாட்டப்பட்ட மாடசாமி (எ) மகேசுக்கு 22 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.12ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

Related Stories: