படைவீரர் குறைதீர் கூட்டம்

சிவகங்கை, செப்.17: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்க உள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை கலெக்டர் அலுவலக அலுவலக வளர்ச்சி மன்றக் கூடத்தில் மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைப்பணியாற்றுவோர், சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் செப்.25 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர், படைவீரர், சார்ந்தோர் அன்றைய தினம் காலை 9.30மணியளவில் கூட்டத்திற்கு வருகை புரிந்து, தங்களது குறைகளை மனுவாக வழங்கி பயனடையலாம்.

Related Stories: