திருச்செந்தூர் ஆர்டிஓ பொறுப்பேற்பு

திருச்செந்தூர், செப்.13: திருச்செந்தூர் ஆர்டிஓவாக கவுதம் பொறுப்பேற்றுக்கொண்டார். புதுக்கோட்டை துணை ஆட்சியராக (பயிற்சி) இருந்த கவுதம் பதவி உயர்வு பெற்று ஆர்டிஓவாக திருச்செந்தூரில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கவுதம் ஆர்டிஓவாக பொறுப்பேற்றுக்கொண்டார். அவரிடம் பழைய ஆர்டிஓ சுகுமாறன் தனது பொறுப்புகளை ஒப்படைத்தார்.நிகழ்ச்சியின் போது,ஆர்டிஓவின் நேர்முக உதவியாளர் கோபாலகிருஷ்ணன், தாசில்தார் பாலசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம் செய்துங்கநல்லூர், செப். 13: கீழவல்லநாட்டில் உள்ள மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் மழைக்கால சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடந்தது. தலைமை ஆசிரியர் கஜேந்திர பாபு தலைமை வகித்தார். வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலர் செல்வக்குமார், மாணவ- மாணவிகளுக்கு மழைக்கால நோய்களை தடுப்பது பற்றிய விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். அனைவருக்கும் சரியான உணவுத் தேர்வு என்ற விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. முகாமில் ஆசிரியர்கள் இந்து ஜெகப்பிரியா, கனகராஜ், மருந்தாளுநர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்,

Related Stories: