புவனகிரி, செப். 13: புதுச்சத்திரம் அருகே உள்ள அத்தியாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மனைவி சுந்தரி (50). இவர் நேற்று முன்தினம் மாலை புதுச்சத்திரம் அருகே உள்ள அத்தியாநல்லூர் வாய்க்கால் அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இவர் மீது இடி, மின்னல் தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
