தமிழ் இலக்கிய மன்ற விழா

தர்மபுரி, செப்.13: தர்மபுரி டவுன் செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், தமிழ் இலக்கிய மன்ற விழா நடந்தது. விழாவுக்கு செந்தில் குழுமத் தலைவர் செந்தில் கந்தசாமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் மணிமேகலை, செயலாளர் தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக அலுவலர் ரபிக் அகமத் வரவேற்றார். இப்பள்ளியின் மேல்நிலைப் பிரிவு மாணவர்களின் போக கவிதை, பாடல் நடனம், நாடகம் போன்ற நிகழச்சிகள் தமிழ் மொழியின் சிறப்பை போற்றும் வண்ணம் அமைந்திருந்தன. இந்நிகழ்ச்சியில் அமைந்திருந்த \”நெகிழியை தவிர்ப்போம்’’ பாடல், \”தமிழ்மொழியின் சிறப்பு” மாறிய பேச்சு \”நவீன திருவிளையாடலில்’’ நடகம் போன்றவற்றை மாணவர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியில் முதல்வர் வள்ளியம்மாள், நிர்வாக முதல்வர் ஓங்காளி, மேல்நிலைப் பிரிவு முதல்வர் திருநாவுக்கரசன், 12ம் வகுப்பு மாணவி சஹரிவாஷினி, பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். …

Related Stories: