உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 960 மனுக்கள் குவிந்தன

தர்மபுரி, செப்.13: தர்மபுரி மாவட்டம், சோகத்தூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் சதீஸ் முகாமை தொடங்கி வைத்தார். தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், ஆர்டிஓ காயத்ரி, தர்மபுரி ஒன்றிய செயலாளர் காவேரி, தாசில்தார் சவுகத் அலி ஆகியோர் கலந்து கொண்டு, முகாமில் மனுக்களை பெற்றனர். இதில் மகளிர் உரிமைத்தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப உறுப்பினர் அட்டை, ஆதார் திருத்தம், இலவச வீட்டுமனை, வீடு உள்ளிட்ட கோரிக்கைகள் வேண்டி, 960க்கும் மேற்பட்டோர் மனுக்கள் அளித்தனர். முகாமில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் மற்றும் ஒன்றிய துணை செயலாளர்கள் தென்னரசு, சதீஷ்குமார், மாது, மதன்குமார், அண்ணாதுரை, திலீபன், உதயசூரியன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: