வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி

ராயக்கோட்டை, செப்.13: ராயக்கோட்டை மண்டிகளுக்கு வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கிலோ ரூ.12க்கு விற்பனையாகி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தக்காளியை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். அறுவடைக்கு பின் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவிற்கு விற்பனைக்கு அனுப்பி வைப்பதால், ராயக்கோட்டை தக்காளி பிரதானமாக உள்ளது.

Related Stories: