கடன் தொல்லையால் டீ கடைக்காரர் தற்கொலை

கிருஷ்ணகிரி, செப்.13: கிருஷ்ணகிரி பாரதியார் நகரை சேர்ந்தவர் முகமது ரபிக் (48). இவர் டீ கடை வைத்திருந்தார். பல்வேறு கடன் வாங்கியிருந்த முகமது ரபிக்கால், அதனை திருப்பி கொடுக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு வந்தனர். இதனால் மனவேதனையில் அவர் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 10ம் தேதி இரவு வீட்டில் உள்ள அறைக்கு அவர் படுக்க சென்றார். பின்னர் மறுநாள் நீண்டநேரமாகியும அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த டவுன் போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: