காளையார்கோவில் கால்நடை மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு

காளையார்கோவில், டிச. 18: காளையார்கோவிலில் அரசு கால்நடை மருத்துவமனை உள்ளது. இங்கு நேற்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார். அப்போது கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள், கால்நடைகளுக்கான திட்டங்கள் செயல்படும் விதம் குறித்து கேட்டறிந்தார். மேலும் கால்நடை மருந்தகத்தின் குறிப்பேடுகளில் விவரங்களின் உண்மை தன்மையை சரிபார்த்து, கிராமப்புறங்களில் அதிக முகாம்கள் நடத்தி கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கவும், வளர்ப்பு முறைகளை எடுத்து கூறவும் அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் முருகேசன், உதவி இயக்குனர் ஜோசப், கால்நடை உதவி மருத்துவர் விஜயகுமார், ஆய்வாளர் ரோஸ்லின், பராமரிப்பு உதவியாளர் மணிவேல் உள்ளிட்டோர் இருந்ததனர்.

Related Stories: