தர்மபுரி, செப்.12:தர்மபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்தி, தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து அதற்குண்டான அலுவலக ரீதியான பணிகள் தீவிரமாக நடந்தது. தற்போது அந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று தர்மபுரி பெருநகராட்சி கமிஷனர் சேகரை, அரூர் நகராட்சி கமிஷனராக பொறுப்பேற்க அரசு உத்தரவிட்டது. அவர் நேற்று கூடுதல் பொறுப்பாக, அரூர் நகராட்சி கமிஷனராக பொறுப்பேற்றார். இவருக்கு கட்சி நிர்வாகிகள், அலுவலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அரூர் நகராட்சியாக தரம் உயர்வு புதிய கமிஷனர் பொறுப்பேற்பு
- அரூர்
- தர்மபுரி
- தமிழ்நாடு அரசு
- அரூர் பஞ்சாயத்து
- தர்மபுரி மாவட்டம்
- தர்மபுரி பெருநகர மாநகராட்சி
- ஆணையாளர்
- ஷேகராய்
- அரூர்…
