அரசு பள்ளியில் உலக ஓசோன் தின விழிப்புணர்வு பேரணி

ஒரத்தநாடு, செப்.10: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருமங்கலக்கோட்டை கீழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினத்தையொட்டி, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் வளர்மதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளரும், கவின்மிகு தஞ்சை இயக்கத்தின் இணைச்செயலாளருமான ஆறுமுகம், முதுகலை ஆசிரியர் செய்திருந்தனர்.

 

 

Related Stories: