தரகம்பட்டி அருகே கூடுதல் விலைக்கு மது விற்றவர் கைது

கடவூர், செப், 10: கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே சிந்தாமணிபட்டி காவல்சரகம் மேலப்பகுதியை சேர்ந்தவர் முருகன் (51). இவர் தென்னிலை ஊராட்சி மாமரத்துப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே மதுபானங்களை விற்பனை செய்து வந்து உள்ளனர். தகவலறிந்த சிந்தாமணிப்பட்டி போலீசார் அந்த பகுதியில் விரைந்து சென்றனர். முருகன் மீது வழக்கு பதிவு செய்து காவல் நிலையம் கொண்டுவந்து விசாரிக்கின்றனர். போலீசார் முருகனிடம் இருந்து 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

 

Related Stories: