வலங்கைமான் அருகே தீண்டாமை சுவரை அகற்ற கலெக்டரிடம் கோரிக்கை மனு

திருவாரூர், செப்.9: திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் பொதுப்பாதையை அடைத்து எழுப்பப்பட்டுள்ள சுவரை அகற்றக்கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கலெக்டர் மோகனசந்திரனிடம் மனு அளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பேரூராட்சிக்குட்பட்ட கோவில்பத்து தெருவில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் 11அடி உயரத்தில் தடுப்பு சுவர் ஒன்று தனிநபர் மூலம் எழுப்பியுள்ளதாகவும், மேலும் பல வருடங்களாக பயன்படுத்தி வந்த பொதுபாதையையும் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இந்த தீண்டாமை சுவரினை அகற்றி பொதுபாதையை மீட்டு தர கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் தமிழ்ச்செல்வி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரகுராமன், நகர செயலாளர் கேசவராஜ் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் முரளி, மாவட்டச்செயலாளர் தமிழ்மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மோகனசந்திரனிடம் நேற்று மனு அளித்துள்ளனர்.

 

Related Stories: