கறம்பக்குடியில் சூப்பர் மார்க்கெட்டில் திருட்டு

கறம்பக்குடி, செப்.9: கறம்பக்குடி தானியக்கடையில் ரு.35 ஆயிரம் திருடு போனதால் பாதிக்கப்பட்டவர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி செட்டி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமதுரை இவர் கறம்பக்குடி தட்டாரத் தெருவில் பகுதியில் உள்ள வி எஸ் கே காம்ப்ளக்ஸ் அருகில் தானியக்கடை நடத்தி வருகிறார் வழக்கம் போல் இரவு தானியக்கடையை பூட்டிவிட்டு செல்வது வழக்கம் அதன்படி நேற்று இரவு பூட்டிவிட்டு சென்றவர் விடியற்காலை வந்து பார்த்தபோது தானியக்கடை பூட்டு உடைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கல்லாவை பார்த்த போது ரூ.35 ஆயிரம் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். கடைக்குள் எங்கு தேடியும் பணம் கிடைக்காத காரணத்தால் அவர் கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து கறம்பக்குடி காவல்துறையினர் விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: