சு.ஆடுதுறை அரசு பள்ளியில் பீச் வாலிபால் போட்டி

குன்னம், செப். 9: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சு. ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் கோப்பைக்கான பீச் வாலிபால் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை தாலுகாவை சேர்ந்த பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

14 வயது பிரிவில் திருமாந்துறை ஆண்ட்ரூஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள் தீபஸ்ரீ, நிமிஷா ஆகியோர் முதலிடமும், 17 வயது பிரிவில் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ரோஷிகா, அமராவதி, சகானா ஸ்ரீ ஆகியோர் முதலிடமும், 19 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பிரியா, தர்ஷினி, அகல்யா ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

இந்த போட்டிகளில் முதலிடம் பெற்ற அணிகள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் சாதிக் பாட்சா, உடற்கல்வி ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

 

Related Stories: