அரியலூர், செப். 9: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், நேற்று நடைபெற்ற மக்கள் குறை கேட்புக் கூட்டத்துக்கு வந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுமக்களிடமிருந்து பெற்ற 1000 மனுக்களை கலெக்டர் ரத்தினசாமியிடம் வழங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த ஜூன் மாதம் அரியலூர் மாவட்டம் முழுவதும் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது, பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டு மனை, வழங்கப்பட்ட வீட்டு மனைகளை அளவீடு செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 1,000 மனுக்களை பெற்றனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் இளங்கோவன், மூத்த நிர்வாகி சிற்றம்பலம் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று கலெக்டர் ரத்தினசாமியை சந்தித்து, பொதுமக்களிடமிருந்து பெற்ற 1000 மனுக்களை வழங்கினர்.
