மயிலாடுதுறையில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மயிலாடுதுறை, செப். 9: மயிலாடுதுறை கோட்ட அலுவலகத்தில் நாளை மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. மயிலாடுதுறை மின் வாரிய கோட்ட அலுவலகத்தில் பொறியாளர் ரோணிக்ராஜ், மேற்பார்வை பொறியாளர்(பொறுப்பு) நாகை மின் பகிர்மான வட்டம் தலைமையில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

அதுபோல், ஒவ்வொரு மாதமும் 2வது புதன்கிழமை அன்று மயிலாடுதுறை கோட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் நாகை மின்பகிர்மான வட்டம் தலைமையில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என்பதையும் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் இக்கூட்டத்தில் நேரில் கலந்துகொண்டு தங்களது குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து பயன் பெற்றுக்கொள்ளவும் என தெரிவித்துள்ளனர்.

 

Related Stories: