வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடுங்க

ஆண்டிபட்டி, செப். 3: நாய் கடித்தாலோ அல்லது நக்கினாலும் உடனடியாக கடிபட்ட இடத்தில் குழாய் நீரில் கொண்டு சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனை சென்று ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் 3ம் நாள், 7ம் நாள், 28ம் நாள் ஆகிய நாட்களில் முறையாக மொத்தம் 4 தடுப்பூசிகள் போட வேண்டும்.

வீட்டில் வளர்க்கப்படும் நாய் தான் கடித்தது என்று அலட்சியமாக இருக்கக்கூடாது. மேலும் நாய் கடிக்கு மந்திரித்து மருந்து வைத்து கடிப்பட்ட இடத்தில் கட்டுதல் போன்ற செயல்களை செய்யக்கூடாது. நாய் வளர்ப்பவர்கள் பிறந்த 3 மாதத்தில் நாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். கால்நடை மருத்துவரிடம் ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: