திரவியம் கல்வி நிறுவனங்கள் சார்பில் இலவச மருத்துவ முகாம்

தேனி, செப். 2: பெரியகுளம் அருகே குள்ளப்புரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திரவியம் கல்வி நிறுவனங்கள் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. பெரியகுளம் அருகே குள்ளப் புரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெரியகுளம் திரவியம் கல்வி நிறுவனங்கள், வைகை ஸ்கேன் சார்பில், இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு திரவியம் கல்வி நிறுவனங்கள் மற்றும் வைகை ஸ்கேன் நிறுவனர் டாக்டர்.பாண்டியராஜ், திரவியம் கல்வி நிறுவனங்களின் செயலாளர் டாக்டர்.ஹேமலதா ஆகியோர் தலைமை வகித்தனர்.

இம்முகாமினை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளாதேவி துவக்கி வைத்தார். மேலும், இம்முகாமில் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், சிறுநீரகம், பொது மருத்துவம், பல் மருத்துவம், ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமில், மருத்துவர்கள் காமராஜ், ஜான் வெஸ்லின், தாரணி, ஜெய்லானி, பிரீத்தி, சந்திரா மற்றும் திமுக மீனவர் நல வாரிய உறுப்பினர் முருகன், கிராம முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: