வடக்கலூர் கிராமத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு திட்ட முகாம்

பெரம்பலூர், ஆக.30: பெரம்பலூர் மாவட்டம், வடக்கலூர் கிராமத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்கலூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு திட்ட முகாமில் வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன் குன்னம் வட்டாட்சியர் சின்னதுரை மங்களமேடு காவல் ஆய்வாளர் கமலஹாசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

வடக்கலூர் கிழுமத்தூர் சுற்றியுள்ள கிராம மக்கள் மகளிர் உரிமைத்தொகை, மின்சாரத்துறை, வருவாய்த்துறை, மருத்துவம், மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர் புற வளர்ச்சித் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், மற்றும் பல துறைகளில் இருந்து தங்களுக்கு தேவையான திட்டத்தில் மக்கள் மனுக்களை பதிவு செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி செயலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர், இம் முகாமில் 780 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

 

Related Stories: