பெண் வியாபாரி தற்கொலை

புதுச்சேரி, ஆக. 27: புதுச்சேரி முதலியார்பேட்டை தியாகிகள் வீதியை சேர்ந்த பழனி மனைவி காமாட்சி (50). கணவர், கடந்த 2020ல் இறந்து விட்டதால் காமாட்சி, மளிகைக்கடை நடத்தி வந்தார். ஒரு மகன், மகள்(28) உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகவில்லை. காமாட்சிக்கு மளிகை கடையில் போதிய வருமானம் இல்லாமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பொருட்கள் வாங்க பணம் இல்லாமல் கடையை நடத்த முடியாமல் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். மேலும், மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லையே எனவும் தவித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காமாட்சி, வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று இரும்பு கம்பியில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து மகன் குப்புசாமி, முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Related Stories: