துணை ஜனாதிபதி தேர்தல் இரு சித்தாந்தங்களுக்கு இடையேயான போட்டி: சுதர்சன் ரெட்டி பேட்டி

புதுடெல்லி: துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9ம் தேதி நடக்க உள்ளது. இதில் ஆளும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் பொது வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், சுதர்சன் ரெட்டி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

தேசிய ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில், உயர் அரசியலமைப்பு பதவிகள் ஒருமித்த கருத்தினால் நிரப்பப்பட வேண்டும் என்று நானும் விரும்புகிறேன். துணை ஜனாதிபதி தேர்தல் எனக்கும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் இடையேயான போட்டி அல்ல. இரு வெவ்வேறு சித்தாந்தங்களுக்கு இடையேயான போட்டி இது. இதில் ஒரு நபர் மிகச்சிறந்த ஆர்எஸ்எஸ் மனிதர். என்னைப் பொறுத்த வரை அந்த சித்தாந்தத்தை நான் ஆதரிக்கவில்லை. அதிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories: