மாநில பிக்கில் பால் போட்டி வெற்றி திண்டுக்கல் வீரர்களுக்கு பாராட்டு

திண்டுக்கல், ஆக. 23: திருநெல்வேலி மாவட்டத்தில் மாநில அளவிலான பிக்கில் பால் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் 19 வயது தனிநபர் பிரிவில் பிரகாஷ் இரண்டாம் இடமும், 16 வயது மாணவிகளுக்கான இரட்டையர் பிரிவில் யாழினி, பூஜா இரண்டாம் இடம் பிடித்தனர்.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. செயலாளர் வெங்கடேஷ், துணை செயலாளர் செந்தில்குமார் துணை தலைவர் ராஜகோபால் முன்னிலை வகித்தனர். பிக்கில் பால் சங்க சேர்மன் ராஜ்குமார் தலைமை வகித்து வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பயிற்சியாளர் கடவுள் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

 

Related Stories: