உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

ஓசூர், ஆக.23: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று(23ம் தேதி) நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று(23ம் தேதி) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுகிறது. அதன்படி காலை 9 மணிக்கு தளி ஒன்றியத்தில் தளி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், காலை 10 மணிக்கு ஓசூர் ஒன்றியம் பாகலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், காலை 11 மணிக்கு சூளகிரி ஒன்றியம் சென்னேப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் பீமண்டப்பள்ளி, குப்பாச்சிபாறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் கெலமங்கலம் ஒன்றியம் தொட்டதிம்மனள்ளி கிராம நூலக கட்டிடத்திலும், முத்தம்பட்டியில் நண்பகல் 12.30 மணிக்கும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுகிறது. முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள், திமுகவினர் சிறப்பான முறையில் செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பிரகாஷ் எம்எல்ஏ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: