உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

தேன்கனிக்கோட்டை, ஆக.23: தேன்கனிக்கோட்டையில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று மனு அளித்தனர். தேன்கனிக்கோட்டையில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது. பேரூராட்சி தலைவர் சீனிவாசன், செயல் அலுவலர் மஞ்சுநாத் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். முகாமில் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, ரேஷன் அட்டை, ஆதார் திருத்தம், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மருத்துவ முகாம், மின்வாரியம், காவல்துறை, தீயணைப்புதுறை உள்ளிட்ட துறை சார்ந்த ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. 10வது வார்டு முதல் 18வது வார்டு வரையுள்ள பொதுமக்கள் மனு கொடுப்பதற்காக குவிந்தனர். தளி ராமச்சந்திரன் எம்எல்ஏ முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related Stories: