ஜெயங்கொண்டம், ஆக.20: ஜெயங்கொண்டம் ஒன்றியம், கல்லாத்தூர் ஊராட்சி,தண்டலை ஊராட்சி ஆகியவற்றிற்கு, கல்லாத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் சிறப்புரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் பார்வையிட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி, பொதுமக்கள் 1107 பேரிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் வட்டாட்சியர் சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஸ்தூரி, சந்தானம் மற்றும் ஜெயங்கொண்டம் மத்திய ஒன்றிய பொறுப்பாளர் கழக நிர்வாகிகள், மண்டல துணை வட்டாட்சியர் கஸ்தூரி, வருவாய் ஆய்வாளர் செல்வராஜ், மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உதவியாளர்கள் உள்ளிட்ட பல்துறை அரசு அலுவலர்கள்,கழக தோழர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
