அரியலூரில் 22ம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

அரியலூர், ஆக. 20: அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பு : அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஆகஸ்ட் – 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 22ம் தேதி வெள்ளிகிழமை அன்று காலை 10 மணியளவில், மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தெரிவித்துள்ளார்.

 

Related Stories: