எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்

பெரம்பலூர், ஆக.20: வி.களத்தூர் கிராமத்தில் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, வி. களத்தூர் கிராமத்தில், பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில், எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வி.களத்தூர் கிராம நிர்வாக அலுவலர் முத்துசாமி தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் ஓசை கலைக்குழுவினர் கலந்து கொண்டு எச்.ஐ.வி பால்வினை நோய் விழிப்புணர்வு குறித்து கரகாட்டம், வீதி நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் வாலிகண்டபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆலோசகர் கீதா, வி.களத்தூர் ஊராட்சி செயலாளர் சாந்தி, வி.களத்தூர் பகுதியின் களப் பணியாளர்கள் நீலமேகம், சக்திவேல் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர் பழனிவேல் ராஜா நன்றி கூறினார்.

 

Related Stories: