சீர்காழி, ஆக. 20: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட சீனிவாசபுரத்தில் மாற்று திறனாளிகளுக்கான ஹோப்ஸ் அண்ட் டிரிம்ஸ் சிறப்பு பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு விளையாட்டு பயிற்சி மையம், மேம்படுத்தப்பட்ட ஸ்டேஷனரி, மற்றும் கேண்டின்கள் திறப்பு விழா திருவெண்காடு டாக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
பள்ளி தலைமை தாளாளர் டாக்டர் ஸ்ரீதரன் விளையாட்டு பயிற்சி மைய அரங்கை திறந்து வைத்தார், டாக்டர் ஜெயச்சந்திரன் ஸ்டேஷனரி, மற்றும் கேண்டின் ஆகியவற்றை திறந்து வைத்தார். விழாவில் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழா முடிவில் பள்ளி தாளாளர் டாக்டர் கீதா ஸ்ரீதரன் நன்றி கூறினார்.
