மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இந்திய அணி அறிவிப்பு ஹர்மன்பிரீத் கேப்டன்

புதுடெல்லி: ஐசிசி மகளிர் உலகக்கோப்பை ஒரு நாள் போட்டித் தொடரில் மோதும் இந்திய அணி வீராங்கனைகள் பட்டியல் வெளியாகி உள்ளது. தேர்வுக் குழு தலைவர் நீது டேவிட் வெளியிட்ட இப்பட்டியலில், ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக இடம்பெற்றுள்ளார்.

மேலும், ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிகஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாடியா, தீப்தி சர்மா, அமன்ஜோத் கவுர், ராதா யாதவ், ஸ்நேஹ் ராணா, அருந்ததி ரெட்டி, ஸ்ரீசரணி, ரேணுகா சிங், கிரந்தி கவுட் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

மகளிர் உலகக் கோப்பை தொடரில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இங்கிலாந்து, நியுசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை ஆகிய 8 நாடுகள் மோதுகின்றன. முதல் போட்டி, செப்.30ம் தேதி துவங்குகிறது. இறுதிப் போட்டி, நவ.2ம் தேதி நடைபெறும். இப்போட்டிகளை, இந்தியா, இலங்கை நாடுகள் சேர்ந்து நடத்துகின்றன.

Related Stories: