துணி வியாபாரி மாயம்

கிருஷ்ணகிரி, ஆக.20: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே மாடரஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சதீஸ்குமார்(33). இவர் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். துணி வியாபாரம் செய்து வந்த சதீஸ்குமாருக்கு, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால், கடன் வாங்கியும் தொழிலில் மீண்டும் மீளமுடியவில்லை என கூறப்படுகிறது. கடன் தொல்லை அதிகரித்த நிலையில், கடந்த 14ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சதீஸ்குமார், பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுகுறித்து சதீஸ்குமாரின் தந்தை கன்னியப்பன், பர்கூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: