அரியலூர், ஆக.19: அரியலூர் அருகே கொத்தடிமையாக ஆடு மேய்த்த 15 வயது சிறுவன் குழந்தைகள் நலன் அமைப்பு மற்றும் போலீசார் நேற்று மீட்டனர்.பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள புதுவேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் என்பவர், அரியலூர் அருகேயுள்ள கோவிந்தபுரத்தில் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார்.இங்கு கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகிலுள்ள தின்னமலை கிராமத்தைச் சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவர், கொத்தடிமையாக ஆடுகளை மேய்த்து வருவதாக 1098 குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
