ராதாமங்கலத்தில் கதண்டு அழிப்பு

 

கீழ்வேளூர், ஆக. 19: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் ராதாமங்கலம் ஊராட்சியில் விஷவண்டுகளை தீயணைப்பு துறையினர் அழித்தனர்.
கீழ்வேளூர் ஒன்றியம் ராதாமங்கலம் ஊராட்சி காலனி தெருவில் குடியிருப்பு பகுதியில் உள்ள தென்னை மரத்தில் விஷ வண்டுகள் (கதண்டு) கூடு கட்டி இருந்தது. இந்த விஷ வண்டுகள் அப்பகுதியில் வசிக்கும் மக்களை அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து ராதாமங்கலம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜராஜசோழன் மேற்பார்வையில் தீயணைப்பு வீரர்கள் ரசாயன மருந்துகள் கொண்டும், தீப்பந்தங்கள் கொளுத்தியும் விஷ வண்டுகளை அளித்தனர்.

Related Stories: