சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: துணை குடியரசு தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக மண்ணின் மைந்தர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். மக்களின் நலனையும் தேசியவாதத்தையும் முன்னிலைப்படுத்தி, அயராது உழைத்தவர். பிணைப்பு ஆகிய சிறந்த குணங்கள் தான் அவரை தலைசிறந்த மக்கள் தலைவராக உயர்த்தின. முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுக்கு பின், மீண்டும் தமிழர் ஒருவர் குடியரசுப் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளது தமிழர்களின் திறமைக்கு பாஜ அளிக்கும் மதிப்பை உணர்த்துகிறது. தமிழர் ஒருவர் தேசத்தை வழிநடத்தும் உயரிய பொறுப்பில் இருப்பது நம் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பெருமைக்குரிய விஷயமாகும். எனவே, வரவிருக்கும் துணை குடியரசு தலைவர் தேர்தலில், வேறுபாடுகளைக் களைந்து தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஒருமனதாக ஆதரவு அளிக்க கேட்டுக்கொள்கிறேன்.
அனைத்துக் கட்சிகளும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்- நயினார் நாகேந்திரன்
- ராதாகிருஷ்ணன்
- நைனார் நாகேந்திரன்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பாஜக
- தேசிய ஜனநாயக கூட்டணி
- துணை ஜனாதிபதி
