கால்நடைகளுக்கான பாதுகாப்பு முறைகள் அதிகாரிகள் விளக்கம்

மதுரை, ஆக. 18: கால்நடைகளைப் பராமரிப்பது மற்றும் பாதுகாப்பதற்கான முக்கிய வழிமுறைகள் குறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கால்நடைகளின் கொட்டகைகள் சுத்தமாகவும், காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும். மாட்டுக்கொட்டகைகளை தென்னை, பனை ஓலைகளை கொண்டு கூரையாக அமைக்க வேண்டும், இதனால் சூரிய ஒளியின் நேரடி தாக்கத்திலிருந்து பசுக்களை பாதுகாக்கலாம். கொட்டகையை சுற்றி நிழல் தரும் மரங்கள் அமைப்பது மிகவும் நல்லது.

மேலும் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் சரியான அளவில் வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு சுத்தமான குடிநீர் எப்போதும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கோடை காலங்களில், கால்நடைகளுக்கு அதிக அளவில் தண்ணீர் தேவைப்படும், எனவே, தாகம் ஏற்படாமல் தொட்டிகளில் நீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி போடுவதன் மூலம் நோய் தாக்குதலில் இருந்து அவற்றை பாதுகாக்கலாம்.

நோய்வாய்ப்பட்ட கால்நடைகளை மற்றவற்றிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும். கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடும்போது, அதிக மேய்ச்சலைத் தவிர்க்க வேண்டும். நிழலான இடங்களில் மேய்ச்சலுக்கு விட்டால், வெயிலில் இருந்து பாதுகாக்கலாம். கால்நடைகளை பாதுகாப்பதன் மூலம், பால் உற்பத்தி மற்றும் இனப்பெருக்கத் திறனை மேம்படுத்தலாம். இவ்வாறு கூறினர்.

 

Related Stories: