இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர்கள் தொண்டர் படை பயிற்சி முகாம்

ஜெயங்கொண்டம், ஆக. 18: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஜெயங்கொண்டம் விளையாட்டு மைதானத்தில் இளைஞர்களுக்கான தொண்டர் படை பயிற்சி முகாம் நடைபெற்றது. காத்தவராயன் தலைமை வகித்தார்.இந்த பயிற்சி முகாமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் மணிவண்ணன் துவக்கி வைத்தார்.

தொண்டர் படை பயிற்சியாளர் காரல் மார்க்ஸ் இளைஞர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்தார். இந்த பயிற்சி முகாம் இளைஞர்களுக்கு இடையே சமூகப் பொறுப்பும், அரசியல் விழிப்புணர்வும் ஏற்படுத்தியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பழூர் ஒன்றிய செயலாளர் முருகேஸ்வரி, லோகநாதன், பன்னீர்செல்வம்ராதாகிருஷ்ணன் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட தோழர்களை வாழ்த்தி பேசினர்.

இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட தோழர்கள் ராஜேஸ்வரி, ஜனனி, தாமரைச்செல்வன், ஆகாஷ், ஆதித்யவர்ஷன், ஜனார்த்தனன்,பாரதி வல்லவன், சேரஅரசு, ராமன் ஆனந்தகுமார், ராம்குமார்,பாலமுருகன் உள்ளிட்ட பலர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

 

Related Stories: