காரைக்கால் பி.டெக் 2ம் ஆண்டு சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு

காரைக்கால், ஆக.18: பி.டெக் 2ம் ஆண்டு சேர்க்கைக்கு புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்டாக் அறிவித்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாலிடெக்னிக் கல்லூரிகளில் துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் பி.டெக் 2ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்காக (லேட்ட ரல் என்ட்ரி) இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களின் கோரிக்கை அடிப்படையில் புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆன்லைனில் விண்ணப்பத்தை வரும் 19ம் தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாணவர்கள் சென்டாக் இணையதளத்தை பார்க்கவும். மேலும் விபரங்கள் அறிய 0413-2655570, 2655571 என்ற தொலைபேசி எண்ணில் சென்டாக் உதவி மையத்தை மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Related Stories: