பழுதான மின்கம்பத்தை மாற்ற வலியுறுத்தல்

 

போச்சம்பள்ளி, ஆக. 18: மத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாடாரஅள்ளி பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு மத்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், மாடாரஅள்ளியில் இருந்து பர்கூர் செல்லும் சாலை ஏரிக்கரையில் கான்கிரீட் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மின் கம்பத்தில் சிமெண்ட் பூச்சு உதிர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. சேதமான இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழுவதற்கான அபாயம் உள்ளது. எனவே, மின்கம்பம் விழுந்து விபத்து ஏற்படுவதற்குள், பழைய மின் கம்பத்தை அகற்றி, புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: