தேசிய குத்துச்சண்டை: 12 பதக்கங்கள் வென்று தமிழ்நாடு அணி சாதனை

நொய்டா: உத்தரப்பிரதேசத்தின் நொய்டா நகரில் நடந்த உப ஜூனியர் தேசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணி 12 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளது. நொய்டாவில், கடந்த 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை, 4வது உப ஜூனியர் தேசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில் பங்கேற்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகள், 3 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என, 12 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். ஆடவர் பிரிவில், சந்தோஷ் (35 கிலோ), ஒப்ரைட் மெக்கடஸ் (37 கிலோ) தங்கம் வென்று அசத்தினர். மகளிர் பிரிவில் மோன்ஷிகா (70+ கிலோ) தங்கம் வென்றார். தவிர, தமிழ்நாடு மகளிர் அணி ஒட்டு மொத்த ரன்னர் அப் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் கைப்பற்றியது.

Related Stories: