தரங்கம்பாடி, ஆக. 14: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே திருவிளையாட்டம் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கூறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஸ்டாலின், துரைராஜ், மாரியப்பன், சிம்சன், விஜயகாந்த், வெண்ணிலா, மார்க்ஸ், அமுல்காஸ்ட்ரோ, ரவிச்சந்திரன், உட்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அரும்பாக்கம் பாலத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து ஆர்ப்பாடடத்தில் கலந்து கொண்டனர்.
