கோவில்பட்டி, ஆக. 14: கோவில்பட்டி யூனியன், சிதம்பராபுரம் கிராமத்தில் சிதம்பராபுரம், இளம்புவனம், சுரைக்காய்பட்டி உள்ளிட்ட ஊராட்சி மக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இதில் பங்கேற்ற மார்க்கண்டேயன் எம்எல்ஏ பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாகத் தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான ஆணைகளை பயனாளிகளிடம் வழங்கினார். இதில் எட்டயபுரம் தாசில்தார் சுபா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சரவணன், கோவில்பட்டி பிடிஓக்கள் முத்துக்குமார், ராமராஜன், திமுக ஒன்றியச் செயலாளர்கள் கோவில்பட்டி கிழக்கு நவநீதக்கண்ணன், விளாத்திகுளம் தெற்கு இமானுவேல், மாவட்ட பிரதிநிதி முத்தையாக்கண்ணு, முன்னாள் பஞ். தலைவர் வைகுந், ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளத்துரை, இளைஞர் அணி ஒன்றிய துணை அமைப்பாளர் சுரேஷ், கிளைச் செயலாளர்கள் மொளனதாஸ், மாடசாமி, வைரம், எட்டயபுரம் பேரூர் துணை செயலாளர் மாரியப்பன், வார்டு செயலாளர் பிச்சை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
- ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
- கோவில்பட்டி
- கோவில்பட்டி யூனியன்
- சிதம்பரபுரம்
- இளம்புவனம்
- சுரைக்காய்பட்டி
- Markandeyan
- சட்டமன்ற உறுப்பினர்
