75 கிலோ குட்கா கடத்தி வந்தவர் கைது

தர்மபுரி, ஆக. 14: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் எஸ்ஐ பிரபாகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெள்ளக்கல் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் 45 கிலோ குட்கா இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. காரை ஓட்டி வந்த பென்னாகரம் மணல்பள்ளம் பகுதியை சேர்ந்த சதீஸ்குமார்(32) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டபோது, மற்றொரு காரில் 30 கிலோ குட்காவை வாலிபர் ஒருவர் கடத்தி வந்தார். போலீசாரை பார்த்ததும் அவர், காரை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதனையடுத்து, மொத்தம் ரூ.9 லட்சத்து 30ஆயிரம் மதிப்பிலான 2 கார்கள் மற்றும் குட்கா ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Stories: